/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
/
மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
ADDED : டிச 05, 2024 05:42 AM

ராமநாதபுரம்: தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஹிந்துமக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் கர்ணன் தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், மதம் மாறிச் சென்றவர்கள் ஹிந்து மதத்தில் சலுகைகளை கோர முடியாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக இரட்டை சலுகை முறையை அனுபவித்து வருபவர்கள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுத்து இதுவரை அவர்களுக்கு வழங்கிய சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்.
மதமாற்றத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். அதற்கு தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்தத வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.