/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் ரோட்டில் பயன்பாட்டுக்கு வந்த உயர்மட்ட பாலம்: 30 கிராம மக்கள் நிம்மதி
/
ஆனந்துார் ரோட்டில் பயன்பாட்டுக்கு வந்த உயர்மட்ட பாலம்: 30 கிராம மக்கள் நிம்மதி
ஆனந்துார் ரோட்டில் பயன்பாட்டுக்கு வந்த உயர்மட்ட பாலம்: 30 கிராம மக்கள் நிம்மதி
ஆனந்துார் ரோட்டில் பயன்பாட்டுக்கு வந்த உயர்மட்ட பாலம்: 30 கிராம மக்கள் நிம்மதி
ADDED : ஏப் 06, 2025 05:31 AM

ஆர்.எஸ்.மங்கலம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் ரோட்டில், சருகனி கோட்டக்கரை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, மேல்பனையூர் விலக்கில் இருந்து நத்தக்கோட்டை, கூடலுார், ஆயங்குடி வழியாக ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.
சருகனி ஆறு பிரிவு, கோட்டக்கரை ஆற்றின் குறுக்கே இந்த ரோடு செல்கிறது.
மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த ரோட்டை பயன்படுத்த முடியாத நிலையில் அப்பகுதி கிராமத்தினர் பாதிப்படைந்து வந்தனர்.
பல ஆண்டுகளாக நீடித்த பிரச்னைகள் குறித்தும், ஆற்றில் தண்ணீர் செல்லும் போது பள்ளி கல்லுாரி மாணவர்களும், அப்பகுதியினரும் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி எதிரொலியாக ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நபார்டு வங்கி ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதைத் தொடர்ந்து, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர்.

