சாயல்குடி: சாயல்குடி அருகே டிச.12 முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள உச்சிநத்தம் மற்றும் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் காட்டாற்று வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெள்ளநீர் தற்போது வரை வி.சேதுராஜபுரத்தில்இருந்து உச்சிநத்தம் வரை தொடர்ந்து வெளியேறுகிறது.
எட்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாலம் வேலை ஆமை வேகத்தில் நடப்பதால் 100 மீ.,க்கு வெள்ளநீர் மறுகால் பாய்கிறது.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் பொதுமக்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் வெள்ளத்தைக் கடந்து சென்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
வி.சேதுராஜபுரம் முதல் உச்சிநத்தம் வரை பாலம் வேலை மிகவும் மந்தமாக நடக்கிறது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்து அதிகாரிகள்முழுமையாக எங்கள் பகுதிக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும்.
எனவே மாவட்ட நிர்வாகம் 10 கிராம மக்களின் நலன் கருதி தரமான முறையில் பாலம் அமைக்கவும், வெள்ள காலங்களில் உரிய முறையில் தண்ணீர் வெளியேற வடிகால் வசதி செய்ய வேண்டும் என்றனர்.

