/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹவாலா பணம் கொள்ளையா இளையான்குடி போலீசார் விசாரணை
/
ஹவாலா பணம் கொள்ளையா இளையான்குடி போலீசார் விசாரணை
ஹவாலா பணம் கொள்ளையா இளையான்குடி போலீசார் விசாரணை
ஹவாலா பணம் கொள்ளையா இளையான்குடி போலீசார் விசாரணை
ADDED : நவ 20, 2025 02:51 AM

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பஸ்சிலிருந்து இறங்கிய நபரிடம் பேக்கை பறித்துக் கொண்டு 3 பேர் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரும் புகார் கொடுக்காததால் ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்டு சென்றதா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8:15 மணிக்கு இளையான்குடிக்கு தனியார் பஸ் வந்தது. புதுார் பகுதியில் வந்த போது பஸ்சை நிறுத்தி அதிலிருந்து ஒருவர் பேக்குடன் இறங்கினார். அப்போது டூவீலரில் வந்த மூன்று பேர் அந்த நபர் கொண்டு வந்த பேக்கை பறித்துக் கொண்டு டூவீலரில் தப்பினர். பேக்கை கொண்டு வந்த நபர் அவர்களிடம் பேக்கை பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அருகில் இருந்த ஒரு நபரை அழைத்துக் கொண்டு வந்து டூவீலரை விரட்ட முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இளையான்குடி போலீசார் கூறியதாவது: பஸ்சிலிருந்து இறங்கிய நபரிடம் பேக்கை பறித்து சென்றது தொடர்பாக இதுவரை யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருப்பினும் அவர் கொண்டு வந்த பையில் ஹவாலா பணம் இருந்ததா அல்லது பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் அல்லது பொருட்கள் ஏதும் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

