/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குரூப்-4 போட்டி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
/
குரூப்-4 போட்டி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : பிப் 03, 2024 04:59 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குருப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு பிப்.5 முதல் துவங்க உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஜூன் 9 ல் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ( குரூப்- 4 ) நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.5 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விபரங்களுடன் கலந்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 80721 79557 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

