/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் குப்பை காற்றில் காலி இடங்களில் பரவுது
/
கலெக்டர் அலுவலகத்தில் குப்பை காற்றில் காலி இடங்களில் பரவுது
கலெக்டர் அலுவலகத்தில் குப்பை காற்றில் காலி இடங்களில் பரவுது
கலெக்டர் அலுவலகத்தில் குப்பை காற்றில் காலி இடங்களில் பரவுது
ADDED : பிப் 19, 2024 05:00 AM

பட்டணம்காத்தான், : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தினமும் குப்பை அகற்றப்படாமல் குவிந்துள்ளதால் காற்றில் பாலிதீன் பைகள் காலி இடங்களில் பறந்து கிடக்கிறது.
பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில்கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நீதிமன்றம், கல்வி, வேளாண் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலங்களுக்கு பல்வேறு பணிக்காக ஏராளமானோர் வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெயரளவில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தினமும் அகற்றப்படாததால் காற்றில் பாலிதீன் பைகள் பறந்து காலி இடங்களில் பரவியுள்ளது.
எனவே கூடுதலாக குப்பை தொட்டிகள் வைக்கவும், தினமும் அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.