/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வன விலங்குகளால் பயிர் சேதம் இழப்பீடு வழங்கிய வனத்துறை
/
வன விலங்குகளால் பயிர் சேதம் இழப்பீடு வழங்கிய வனத்துறை
வன விலங்குகளால் பயிர் சேதம் இழப்பீடு வழங்கிய வனத்துறை
வன விலங்குகளால் பயிர் சேதம் இழப்பீடு வழங்கிய வனத்துறை
ADDED : பிப் 15, 2024 05:10 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வன விலங்குகளால் பயிர் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்கினர்.ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறியதாவது:
மாவட்டத்தில் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தியதாக நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடி சுப்பையன் நிலத்தில் காட்டுப்பன்றிகள், மான்கள் பயிர்களை சேதப்படுத்தியதற்காக ரூ.67,750ம், அதே பகுதியைச் சேர்ந்தஉமாதேவிக்கு ரூ.61,750, மலர் மங்கைக்கு ரூ.61,750, கவிதைக்குடி தியாகராஜனுக்கு ரூ.18,500 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை சான்று தேவையில்லை. வன விலங்குகளால் பயிர் சேதமடைந்த 15 நாட்களுக்குள் அருகில் உள்ள வனத்துறை அலுவலகங்களை விவசாயிகள் அணுகலாம்.
வன விலங்குகளால் பொதுமக்களுக்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு விரைந்து நஷ்ட ஈடு வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் நிவாரணத்திற்கு 97864 56941, 86103 80676, ஆகிய அலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றார்.

