/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி முகாம்
/
உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 18, 2025 11:40 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் காலை உணவு திட்ட மையப் பொறுப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி முகாம் நடந்தது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் பாபு தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது, மண்டல உதவித் திட்ட அலுவலர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் அரசகுமார் வரவேற்றார். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலக பணியாளர் சதீஷ்குமார் காலை உணவு திட்ட மையப் பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி குறித்து பல்வேறு விளக்கம் அளித்தனர். இதில் முதுகுளத்துார் வட்டாரத்திற்குட்பட்ட 105 பள்ளியில் உள்ள காலை உணவு திட்டம் மையப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

