/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குளிர் சீசனில் தனுஷ்கோடியில் கரை வலையில் மீன்வரத்து மீனவர்கள் மகிழ்ச்சி

ADDED : டிச 17, 2024 03:47 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் குளிர் சீசனில் தனுஷ் கோடியில் கரைவலையில் அதிக மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நவ., முதல் ஜன., வரை ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் குளிர் சீசன் நிலவும். இதனால் பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் வசிக்கும் மீன்கள் தட்பவெப்ப மாறுதலால் கடலோரத்தில் வசிக்கும்.
இதனை பயன்படுத்தி தனுஷ்கோடி கடலில் பாரம்பரிய கரைவலையில் மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக கரைவலையில் சூடை மீன், மாஊழா மீன், பாறை மீன், கரை ஊழி மீன்கள் அதிகளவில் சிக்குகின்றன. ருசியான இந்த மீன்களுக்கு ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் மவுசு அதிகம். மேலும் இந்த மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.