/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீயணைப்பு துறையினர் செயல்முறை பயிற்சி
/
தீயணைப்பு துறையினர் செயல்முறை பயிற்சி
ADDED : மார் 13, 2024 12:44 AM

ஆர்.எஸ்.மங்கலம், - ஆபத்தான நேரங்களில் தீ தடுப்பு எச்சரிக்கை வழிமுறைகள் குறித்து ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்புத் துறை சார்பில் அரசு மருத்துவமனையில் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆபத்துக் காலத்தில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்தும், அதை கையாளும் விதங்கள் குறித்தும் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலநாதன் தலைமையில் வீரர்கள் செயல்முறை பயிற்சி அளித்தனர்.
சிலிண்டரில் தீப்பற்றினால் அதை அணைக்கும் வழிமுறைகள் மற்றும் தீயணைப்பு கருவியின் மூலம் தீயை அணைக்கும் வழிமுறைகள் குறித்தும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

