/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை குப்பை கிடங்கில் தீ வைப்பு: புகையால் அவதி
/
கீழக்கரை குப்பை கிடங்கில் தீ வைப்பு: புகையால் அவதி
கீழக்கரை குப்பை கிடங்கில் தீ வைப்பு: புகையால் அவதி
கீழக்கரை குப்பை கிடங்கில் தீ வைப்பு: புகையால் அவதி
ADDED : ஜூலை 20, 2025 11:03 PM

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி குப்பை கிடங்கில் வைக்கப்பட்ட தீயால் சில நாட்களாக புகை பரவி அப்பகுதி சுகாதாரக்கேட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கீழக்கரை நகரில் நாள்தோறும் சேகரமாகும் 10 டன்னிற்கும் அதிகமான குப்பை மோர்க்குளம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கொட்டப்பட்ட குப்பை, கிடங்கில் ஒரு பகுதியில் வைத்த தீ பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகியுள்ளது.
இதன் மூலம் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
எனவே இது விஷயத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் பரவும் தீயை கட்டுப்படுத்தவும் மற்ற இதர குப்பை கிடங்குகளில் தீ பரப்புவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய முறையில் மக்கும் குப்பை மக்கா குப்பைகளை பிரித்து திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.