/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் பருத்தி செடிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை
/
மழையால் பருத்தி செடிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை
ADDED : டிச 11, 2024 04:41 AM

கமுதி : கமுதி அருகே கொல்லங்குளம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடிகளில் மழைநீர் தேங்கியதால் செடிகள் அழுகி வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கமுதி அருகே கொல்லங்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர். சில விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் பருத்தி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.
அவ்வப்போது பெய்த மழையால் நன்கு வளர்ச்சியடைந்து செடிகளில் பருத்தி காய்க்கத் துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர் அதிகம் தேங்கியதால் செடிகள் அழுகியது.
விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:
கொல்லங்குளம் கிராமத்தில் பருத்தி விவசாயம் செய்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட பருத்திச் செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து காய்கள் காய்த்தது. சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது தொடர் மழையால் நிலத்தில் தண்ணீர் தேங்கியது.
காய்த்துள்ள பருத்தி வெடிக்காமல் அழுகியது. செலவு செய்த பணம் வீணாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

