ADDED : டிச 16, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மீன் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து டிரைவர் பலியானார். மண்டபத்திலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றது.
சிவகங்கை மாவட்டம் அனுமந்தக்குடியை சேர்ந்த ராதாகிருஷணன் 38, வாகனத்தை ஓட்டினார்.
நம்புதாளை அருகே சென்ற போது மாடு குறுக்கே சென்றதால் கட்டுபாட்டை இழந்தது.
ராதாகிருஷணன் தப்பிப்பதற்காக வாகனத்திலிருந்து கீழே குதித்தார். அப்போது வாகனம் அவர் மீது விழுந்ததில் அதே இடத்தில் பலியானர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

