/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி
/
மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி
மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி
மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி
ADDED : அக் 25, 2024 05:05 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப் படை இயக்கம் சுற்றுச்சூழல் துறை மற்றும் பருவநிலை மாற்றம் துறை சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி நடந்தது.
ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல்கல்லுாரியில் நடந்த போட்டியை ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் திவ்யலெட்சுமி துவக்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட், கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். ரங்கோலி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சேகர், தேசிய பசுமைப்படை பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.