/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் ஆர்ப்பாட்டம்
/
திருப்புல்லாணியில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 09, 2024 04:16 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றிய பா.ஜ.,வை கண்டித்தும், சேதுக்கரையில் அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு டெண்டர் விடப்பட்டு வாகன கட்டணம் வசூல் செய்வதை வீண் வதந்திகள் பரப்பி பக்தர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவோரை கண்டித்தும் திருப்புல்லாணி பஸ் ஸ்டாப் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ம.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். திருப்புல்லாணி வட்டார காங்., தலைவர் சேதுபாண்டியன் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ., தொகுதி முன்னாள் தலைவர் அப்துல் வகாப் வரவேற்றார்.
அ.தி.மு.க., பிரதிநிதி கிருஷ்ணகுமார், ம.தி.மு.க., இளையராஜா, வீரக்குமார் உட்பட காங்., அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., கட்சி, அகமுடையார் கூட்டமைப்பு, மருது தேசிய கழகம், அகமுடையார் புலிப்படை சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

