நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி வி.வி.ஏ. சலாஹுதீன் ஆலிம் ஜமாலி கூறியதாவது: ஹிஜ்ரி 1447 ஜமாதியுல் ஆகிர் பிறை 29, டிச. 21 மாலை ரஜப் பிறை தென்பட்டதால் டிச., 22 ரஜபு மாத முதல் பிறை ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
எனவே 2026 ஜன., 16 இரவு புனித பயணமாகிய மிராஜ் இரவாக கொண்டாடப்படும் என்றார். மிராஜ் இரவு என்பது நபிகள் நாயகம் வானுலகம் சென்று இறைவனிடம் ஐந்து வேளைக்கான தொழுகை பெறுவது ஆகும். அந்த சமயத்தில் பள்ளிவாசல்களில் மாலை முதல் இரவு முழுவதும் திருக்குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் மார்க்க ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கும்.
பள்ளிவாசல்கள் பெருவாரியாக மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

