/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

ADDED : டிச 23, 2025 05:32 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டலையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிவெண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சோதனைக்கு பிறகு அது புரளி எனத் தெரிய வருகிறது. நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ---மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் தேவசேனா உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த கார்கள், டூவீலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்களில் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் அது புரளி எனத்தெரிய வந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கேட்டபோது வழக்கமான வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. வேறு ஒன்றுமில்லை என்றார்.