/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர் உடல்
/
கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர் உடல்
ADDED : டிச 22, 2025 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி மாயமான மீனவர் உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது.
டிச.,19ல் ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகின் இன்ஜின் இலையில் சிக்கிய கயிற்றை அகற்றிட கடலுக்குள் இறங்கிய மீனவர் கணேசன் 48, எதிர்பாராமல் மூழ்கி காணாமல் போனார்.
இவரை மீட்க வலியுறுத்தி நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை அருகில் அழுகிய நிலையில் மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.
மரைன் போலீசார் மீனவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைத்தனர்.

