/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கிகள் கடன் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்
/
வங்கிகள் கடன் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்
ADDED : டிச 22, 2025 05:06 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அளவில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து கூறியதாவது:
அரசின் மானிய திட்டங்கள் வங்கிகளின் வழியாக பொது மக்களுக்கு சென்றடைகின்றன. கடந்த மாதங்களில் நடந்த கல்விக்கடன் முகாம் மூலம் கல்விக்கடன் எண்ணிக்கை மாவட்டத்தில் உயர்ந்துள்ளது. தற்சமயம் உரிமை கோரப்படாத வங்கி கணக்குகளின் இருப்பு தொகையை திரும்பப் பெற டிச., 30 வரை முகாம் ரிசர்வ் வங்கி மூலம் நடக்கிறது. தகுதியுள்ளவர்களுக்கு வங்கிகள் கடன் தொகை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், ரிசர்வ் வங்கி (பொ) அலுவலர் ராமநாதபுரம் அன்பரசு, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அருண்குமார், வங்கியாளர்கள் பங்கேற்றனர்.

