/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 14, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்,: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு மாணிக்கவாசகர் பல்லக்கில் எழுந்தருளி கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்தார். பின் நடராஜர் சுவாமி சன்னதி முன்பு திருவாசகம் பாடப்பட்டது. இதன்பின் சன்னதி முன்புள்ள 7 திரைகள் விலக்கப்பட்டதும், ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைதொடர்ந்து நடராஜருக்கு அபிஷேகம், பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் வீதி உலா வந்தனர்.

