ADDED : மார் 11, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 44வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டிற்கான பரிசளிப்பு விழா நடந்தது.
முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஷர்மிளா, செயல் இயக்குனர்கள் ஹாமீது இப்ராஹிம், ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலிடெக்னிக் கல்லுாரி முன்னாள் மாணவரும் ராமநாதபுரம் ஸ்ரீ ரமணா கட்டட கட்டுமான தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காந்தி பங்கேற்றார்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மின்னணுவியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

