/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்கள் குற்றச்சாட்டு: 3 மாதங்களாக குறைதீர் கூட்டம் நடக்காததால் அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நிர்வாகம்

ADDED : அக் 29, 2024 04:46 AM
ராமநாதபுரம்: மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் அதை மதிக்காமல் மூன்று மாதங்களாக மாவட்ட நிர்வாகம் குறைதீர் கூட்டம் நடத்தாமல் உத்தரவை காற்றில் பறக்க விட்டுள்ளதாக ராமநாதபுரம் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மாவட்ட கடல் தொழிலாளர் சங்கத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர்கள் தலைமையில் நடத்த அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை பல மாவட்டங்களில் முறையாக நடைமுறைப்படுத்துவது இல்லை.
இதனால் மீனவர்களின் பிரச்னைகள், கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நலத்திட்ட உதவிகளும் கிடைப்பது இல்லை.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக மாவட்ட நிர்வாகம் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தவில்லை. இதனால் மீன்வளத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு மண்டலங்களிலும் ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
மேலும் தொழில் ரீதியிலான பிரச்னைகளால் மீனவர்களுக்குள் மோதலாக மாறி சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறும் நிலையும் உள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பது போல மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்றனர்.
மீனவர்களின் பிரச்னை, கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நலத்திட்ட உதவிகளும் கிடைப்பது இல்லை.