/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் சிலைக்கு தங்ககவசம் அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு
/
தேவர் சிலைக்கு தங்ககவசம் அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு
தேவர் சிலைக்கு தங்ககவசம் அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு
தேவர் சிலைக்கு தங்ககவசம் அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு
ADDED : அக் 25, 2025 04:07 AM
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா,63வது குருபூஜை விழா அக். 30ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்ட தங்ககவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் பாண்டியன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட இணைச்செயலாளர் கவிதா, கமுதி ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், கருமலையான், கமுதி ஒன்றிய அவைத்தலைவர் சேகரன், முதுகுளத்துார் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
தேவர் சிலைக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.