/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
/
தேவிபட்டினம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
ADDED : நவ 26, 2025 04:42 AM

தேவிபட்டினம்: பருவமழை கைகொடுத்ததை தொடர்ந்து தேவிபட்டினம் பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சம்பை, கழனிக்குடி, சிங்கனேந்தல், வெண்ணத்துார், இலந்தை கூட்டம், பொட்டக வயல், கருப்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை இன்றி அப்பகுதி விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருவதை தொடர்ந்து, வயல்களில் உள்ள நெற்பயிர்கள் பசுமை போர்த்திய நிலைக்கு மாறியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் நெல் வயில்களில் தண்ணீரை தேக்கி விவசாய பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

