/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூட்டியே இருக்கும் புறக்காவல் நிலையம்
/
பூட்டியே இருக்கும் புறக்காவல் நிலையம்
ADDED : பிப் 19, 2024 10:48 PM

ரெகுநாதபுரம்: -திருப்புல்லாணியில் இருந்து 12 கி.மீ., உள்ள ரெகுநாதபுரத்திற்கு புறக்காவல் நிலையம் 2022ல் அமைக்கப்பட்டது. இது பூட்டியே இருப்பதால் பயனின்றி உள்ளது.
ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வாலாந்தரவை, நயினாமரைக்கான், பத்திராதரவை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து செல்லும் ரெகுநாதபுரத்திற்கு புறக்காவல் நிலையம் மூலம் நகர் மற்றும் கிராமங்களில் நடக்கும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு வசதியாக அமைந்தது.
புறக்காவல் ஸ்டேஷன் அமைக்க வேண்டி தினமலர் நாளிதழில் செய்தி முன்பு வெளியானது. இதன் எதிரொலியாக ரெகுநாதபுரம் பஸ் ஸ்டாப் அருகே அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் போலீசார் முறையாக பணியில் இல்லாத நிலை உள்ளது. ரெகுநாதபுரம் பொதுமக்கள் கூறியதாவது:
பள்ளி மற்றும் கல்லுரிகள் நிறைந்த பகுதியில் புறக்காவல் நிலையம் அவசியமாகிறது.
சுற்றுவட்டார கிராமங்களின் மையப்பகுதியாக விளங்கும் ரெகுநாதபுரத்திற்கு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும். வழிப்பறி, செயின் திருட்டு, அடிதடி மற்றும் கிராமங்களில் நடக்கும் ஆடுகள் திருட்டு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
போலீசார் பற்றாக்குறையால் இந்த புறக்காவல் நிலையத்தை பூட்டியே வைத்திருப்பதால் குற்றச் செயல்களால் சிரமத்தை சந்திக்கிறோம். எனவே இயங்க எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

