sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அலைபேசி வழியாக பம்ப்செட் மோட்டார் இயக்கும் கருவிக்கு 50 சதவீதம் மானியம்

/

அலைபேசி வழியாக பம்ப்செட் மோட்டார் இயக்கும் கருவிக்கு 50 சதவீதம் மானியம்

அலைபேசி வழியாக பம்ப்செட் மோட்டார் இயக்கும் கருவிக்கு 50 சதவீதம் மானியம்

அலைபேசி வழியாக பம்ப்செட் மோட்டார் இயக்கும் கருவிக்கு 50 சதவீதம் மானியம்


ADDED : ஜன 14, 2025 05:02 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: வயல்வெளில் உள்ள பம்ப்செட் மோட்டாரை அலைபேசி உதவியுடன் இயக்கவும், கண்காணிக்கவும் முடியும். இதற்குரிய கருவிகள் வாங்கிட விவசாயிகளுக்கு 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே தங்கள் அலைபேசியை பயன்படுத்தி பம்ப்செட் களை இயக்கவும், கண்காணிக்கவும் முடியும்.

மோட்டார் ஒடும் நேரத்தை பார்க்க முடியும். தீ மற்றும் திருட்டு குறித்து அலைபேசிக்கு எச்சரிக்கை அழைப்பு அனுப்பப்படும். மழை பெய்தால் மோட்டார்கள் தானாகவே நின்றுவிடும். அலைபேசியால் இயங்கும் பம்ப் செட் கட்டுப்படுத்தும் கருவிகள் 50 சதவீதம் அல்லது ரூ.7000 வரை மானியமாக வேளாண் பொறியியல்துறை மூலம் வழங்கப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் நிலஆவணங்கள், ஆதார் கார்டு நகல், மின் இணைப்பு ஆகிய விபரங்களுடன் விண்ணப்பத்தை ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருவூலக கட்டடம் முதல் தளத்தில் அமைந்துள்ள வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது 86102 03117 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்துர்,போகலுார், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 96553 04160, அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us