/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.எஸ்.கோவில் தெருவில் நெரிசல் ஒரு வழிப் பாதையாகுமா...
/
எஸ்.எஸ்.கோவில் தெருவில் நெரிசல் ஒரு வழிப் பாதையாகுமா...
எஸ்.எஸ்.கோவில் தெருவில் நெரிசல் ஒரு வழிப் பாதையாகுமா...
எஸ்.எஸ்.கோவில் தெருவில் நெரிசல் ஒரு வழிப் பாதையாகுமா...
ADDED : மே 07, 2024 11:22 PM

பரமக்குடி, : பரமக்குடி எஸ்.எஸ்.கோவில் தெருவில் நாள் முழுவதும் நெரிசல் ஏற்படுவதால் ஒரு வழிபாதையாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி எமனேஸ்வரம் வைகை ஆற்றுப் பாலத்தை இணைக்கும் வகையில் தரைப்பாலம் உள்ளது. இதன்படி மதுரை, மண்டபம் ரோட்டில் இருந்து எஸ்.எஸ்.கோவில் தெரு வழியாக சென்று எமனேஸ்வரம் நயினார்கோவில் ரோட்டை தரைப்பாலம் இணைக்கிறது. இந்நிலையில் எஸ்.எஸ்.கோவில் தெரு ஒரு ஆட்டோ மட்டுமே செல்லும் வகையில் குறுகிய தெருவாக இருக்கிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், திருமண மஹால்கள், கோயில்கள் உள்ளன.
மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளதுடன் 20 க்கும் மேற்பட்ட பிரதான தெருக்களை இணைக்கிறது. இதனால் நாள் முழுவதும் டூவீலர், ஆட்டோ, டிராக்டர், லாரிகள் என செல்வதால் நெரிசல் உண்டாகிறது.
அதிக வாகன போக்குவரத்தால் விபத்து அபாயம் உள்ளது. ஆகவே வைகை ஆறு சர்வீஸ் ரோடு வழியாக கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை செல்லும் வகையில் மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் ரோட்டை ஒரு வழிப் பாதையாக மாற்றும் நிலையில் டூவீலர் மற்றும் ஆட்டோ என அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையில் போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

