/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுமா

ADDED : ஏப் 19, 2024 12:57 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் சமூகநலத்துறை சார்பில் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2024--25 ம் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் நகர்ப்புற பள்ளிக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்கவும், இடை நிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்கள், நகர்ப்புறம், ஊரகம் மற்றும் மலைப்பகுதிகளில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. 2வது கட்டமாக நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக நகர்ப்புறத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நான்காம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் 2024--25 கல்வியாண்டு முதல் விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத்திட்டத்தை வரும் கல்வியாண்டு 2024--25 ல் விரிவுபடுத்த மாநில அரசு உத்தரவிட வேண்டும் என நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.