/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அமைச்சர் சொல்வது உண்மையாகாது : ஆர்.பி.உதயகுமார் * ஆர்.பி.உதயகுமார்

ADDED : மார் 24, 2024 01:14 AM

ராமநாதபுரம் :-ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அமைச்சர் சொல்வது எல்லாம் உண்மையாகிவிடாது என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி., உதயக்குமார் தெரிவித்தார்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலக பணிகளை பார்வையிட்ட பின் கூறியதாவது:
அமைச்சர் ராஜகண்ணப்பன் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். அவர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அப்படி சொல்லியிருக்கலாம்.
இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க., பல முறை வெற்றி பெற்றுள்ளது.ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க., வினரை காணவில்லை. மக்களிடம் கடும் அதிருப்தி உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். நாங்கள் மக்களையும், ஜெ.,வையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறோம். எங்களது வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றார்.
மாவட்ட செயலாளர் முனியசாமி, நகர் செயலாளர் பால்பாண்டி, வேட்பாளர் ஜெய பெருமாள் உடன் இருந்தனர்.-----