/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பணி நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் நிலை என்ன 100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியமா

ADDED : மார் 30, 2024 04:48 AM
பரமக்குடி, : லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் வெளியூர்களுக்கு பணி நிமித்தமாக சென்றுள்ள வாக்காளர்கள் நிலை குறித்து விளக்க வேண்டும்.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்.19ல் நடக்கிறது. தொடர்ந்து நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பரமக்குடி உட்பட ஆறு சட்டசபை தொகுதி மக்களில் சிலர் பணி நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளனர்.
இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து செங்கல் சூளை, கட்டடப் பணி, ஹோட்டல் வேலை என பல்வேறு வேலை தேடி ராமநாதபுரம் மாவட்டத்தில் பணி செய்கின்றனர்.
தொடர்ந்து 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் அலுவலர்கள் இது போன்ற வெளியூர் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என கேள்வி எழுந்துள்ளது. அந்தந்த பகுதியில் ஓட்டுப்பதிவு நாளில் மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கிறது. இதனால் நீண்ட தொலைவில் இருந்து ஓட்டளிக்க பெரும்பாலானோர் வந்து செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் பணி செய்யும் இடத்தில் தொடர் விடுமுறை அளிப்பதும் சாத்தியம் இல்லாமல் உள்ளது.
எனவே 100 சதவீதம் ஓட்டுப்பதிவை முறைப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.