/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுத்தம் செய்யப்படாத கிணறு தொற்று நோய் பரவும் அபாயம்
/
சுத்தம் செய்யப்படாத கிணறு தொற்று நோய் பரவும் அபாயம்
சுத்தம் செய்யப்படாத கிணறு தொற்று நோய் பரவும் அபாயம்
சுத்தம் செய்யப்படாத கிணறு தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : ஏப் 25, 2024 05:38 AM

சிக்கல் : -சிக்கல் ஊராட்சி தெற்கு தெரு அய்யனார் கோயில் செல்லும் வழியில் சுத்தம் செய்யப்படாத கிணறு உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
2022ம் ஆண்டில் இங்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு அமைக்கப்பட்டது. பல மாதங்களாக கிணற்றின் மேல் பகுதியில் துாசு, மரங்களின் இலைகள் விழுந்து நிறைந்துள்ளதால் அவை அசுத்தமாக காணப்படுகிறது.
இங்கிருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீரை தொட்டி மூலம் தெற்குத் தெருவில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.போஸ் கூறியதாவது:
சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் ஊருணியில் உள்ள கிணறு பாசி படர்ந்தும் முறையாக சுத்தம் செய்யாததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கிருந்து பெறப்படும் தண்ணீரை தொட்டியில் ஏற்றி அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சிக்கல் ஊராட்சியில் 4 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளது. அவற்றில் முறையாக குளோரினேசன் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தாமல் உள்ளனர். பெரும்பாலான மேல்நிலைத் தொட்டிகள் அசுத்தமாக காணப்படுகிறது. இவற்றில் காவிரி நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டும் தண்ணீர் சப்பளை இல்லாமல் உள்ளது. எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றார்.

