/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை, தொண்டியில் வாட்டி வதைக்கும் வெயில்
/
திருவாடானை, தொண்டியில் வாட்டி வதைக்கும் வெயில்
ADDED : செப் 17, 2024 04:10 AM
திருவாடானை, : திருவாடானை, தொண்டியில் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வயதானவர்கள், பெண்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர்.
திருவாடானை, தொண்டியில் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த மாதம் ஆங்காங்கே மழை பெய்ததால் மக்கள் வெயிலை பெரிதாக பொருட்படுத்தாமல் தங்களின் அன்றாட பணிகளை செய்தனர். இம்மாதம் துவக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரிக்கிறது.
மேலும் அக்னி நட்சத்திரம் போல பகல் நேர வெப்பநிலை இருப்பதால் மக்கள் வெளியில் செல்ல அஞ்சுகின்றனர். ஆவணி மாதம் விசேஷங்கள் நிறைந்த மாதமாக இருந்ததால் குடும்பத்தினருடன் வெயிலில் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகினர். வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், குளிர்பானங்கள் விற்பனை கடை நோக்கி மக்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். சித்திரை வெயிலை மிஞ்சும் அளவிற்கு ஆவணி வெயில் வாட்டுகிறது.

