ADDED : ஏப் 04, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கமுதி பகுதியில் கவுரவ செட்டியார்கள், சத்திரியநாடார், வட்ட மறவர் சங்கம், விஸ்வகர்மா, மருத்துவர் குல சங்கம் உட்பட சமுதாய முறை நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

