ADDED : ஏப் 03, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் கமலேஷ் 9. ஆண்டாவூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன் தினம் மாலை பள்ளி முடிந்து ஆட்டோவில் கீழ்க்குடிக்கு சென்றார்.
மணவாளன் வயல் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.
இதில் கமலேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கமலேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆட்டோ டிரைவர் பரமணிவயல் இமானுவேலை போலீசார் கைது செய்தனர்.

