/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'
/
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'
ADDED : மார் 23, 2024 02:00 AM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நேற்று ராமேஸ்வரத்தில் சகாயம் தலைமையில் மீனவர் சங்க கூட்டம் நடந்தது. இதில் இலங்கை கடற்படை சிறை பிடித்துஉள்ள 53 மீனவர்கள் மற்றும் சிறை தண்டனை பெற்றுள்ள 5 மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் மத்தியஅரசு வழங்கிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஏப்.8ல் ராமேஸ்வரம் தாசில்தார்அலுவலகத்தில் ஒப்படைப்பது, இதில் துரித நடவடிக்கை எடுக்காவிடில் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது, இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மீனவர் சங்க தலைவர்கள் சேசு, எமிரேட் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.