/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி பிரேத பரிசோதனை தாமதத்தால் மறியல்
/
பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி பிரேத பரிசோதனை தாமதத்தால் மறியல்
பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி பிரேத பரிசோதனை தாமதத்தால் மறியல்
பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி பிரேத பரிசோதனை தாமதத்தால் மறியல்
ADDED : மார் 28, 2024 06:16 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான நிலையில் ராமநாதபுரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய தாமதம் செய்ததால் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை கிராமத்தை சேர்ந்த அழகர் மகன் அபிஷன் 13. இவர் உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக நேற்று காலை 7:30 மணிக்கு ஊரையொட்டி அமைந்துள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கினார். அப்பகுதி மக்கள் மாணவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மறியல்
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் காலை 8:00 மணியில் இருந்து மாலை 4:00 மணி வரை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யாததால் சிறுவனின் உறவினர்கள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு ரோடு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உறவினர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

