ADDED : மார் 26, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே வன்னிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தலைமையாசிரியை நம்புச்செல்வி தலைமை வகித்தார்.
பட்டதாரி ஆங்கில ஆசிரியர் பரமசிவம் வரவேற்றார். சுற்றுச்சூழலை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
இயற்கை ஆர்வலர் சுபாஷ் சீனிவாசன், கணித ஆசிரியை திலகவதி, அறிவியல் ஆசிரியை சுந்தரேஸ்வரி, இடைநிலை ஆசிரியர்கள் வீரசேகரன், பிரபாவதி, சண்முகப்பிரியா, சுற்றுச்சூழல் கிளப் குமார் பங்கேற்றனர்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

