ADDED : செப் 17, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்,: முதுகுளத்துார் -சிக்கல் ரோடு கண்டிலான் அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் வரத்துக்கால்வாய் மணல் மேடாகியதால் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாத நிலை உள்ளது.
முதுகுளத்துார் -கடலாடி ரோடு கண்டிலான் அருகே சாலையை கடந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்வதற்காக குழாய் அமைத்து சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாயில் தேங்கும் தண்ணீரை விவசாய நிலத்திற்கு பாய்ச்சுவதற்காக வரத்து கால்வாய் வசதி உள்ளது. கண்மாய் வறண்டுள்ளது. கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்து மணல் மேடாகி அழிந்து வருகிறது.
வரத்து கால்வாய்களை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

