/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் 78 அடி நீள தேசியக்கொடியுடன் ஊர்வலம்
/
தனுஷ்கோடியில் 78 அடி நீள தேசியக்கொடியுடன் ஊர்வலம்
ADDED : ஆக 16, 2024 02:11 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் 78 அடி நீள தேசியக் கொடியுடன் மாணவர்கள் ஊர்வலம் வந்தனர்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று தனுஷ்கோடி- அரிச்சல்முனை கடற்கரை ரவுண்டானாவில் கிரந்தி பிரஜா சங்கம் சார்பில் 78 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் கிரந்தி பிரஜா சங்கம் நிர்வாகி முரளிமோகன் முதிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஏராளமான டூவீலர்களில் தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் வழியாக மண்டபம் சென்றனர்.

