/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்திரகாளியம்மன் முளைப்பாரி விழா
/
பத்திரகாளியம்மன் முளைப்பாரி விழா
ADDED : ஏப் 15, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, - -கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் பங்குனி முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக காப்பு கட்டிய பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து வந்தனர்.
பின் கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கொட்டு திண்ணையில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை துாக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று ஊருணியில் கரைத்தனர்.
ஒயிலாட்டம்,சிலம்பாட்டம் விளையாடி ஊர்வலமாக சென்றனர்.

