/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அலங்கார மாதா அன்னை தேர்ப்பவனி இன்று விழா நிறைவு
/
பரமக்குடி அலங்கார மாதா அன்னை தேர்ப்பவனி இன்று விழா நிறைவு
பரமக்குடி அலங்கார மாதா அன்னை தேர்ப்பவனி இன்று விழா நிறைவு
பரமக்குடி அலங்கார மாதா அன்னை தேர்ப்பவனி இன்று விழா நிறைவு
ADDED : ஆக 24, 2024 09:21 PM

பரமக்குடி:-
பரமக்குடி அலங்கார மாதா சர்ச்சில் தேர்ப்பவனி விழா நடந்தது.
பரமக்குடி அலங்கார மாதா சர்ச்சில் ஆக.16ல் மாதா உருவம் பொறித்த கொடியை சிவகங்கை மறை மாவட்ட பாதிரியார் பிரான்சிஸ் ஜெயபாரதி ஏற்றினார். தொடர்ந்து தினமும் மாலை சிறப்பு திருப்பலி நிகழ்த்தப்பட்டு சர்ச் வளாகத்தில் மாதா சப்பரம் வலம் வந்தது.
நேற்று மாலை 6:00 மணி முதல் உதவி பங்கு பாதிரியார் அந்தோணி மைக்கேல் திருப்பலியை நடத்தினார். பரமக்குடி மறை வட்ட பங்கு பாதிரியார் இருதயராஜ் முன்னிலை வகித்தார். பங்கு பாதிரியார்கள் ஆசிர்வாதம், ஜேசு, ஞானதாசன் பங்கேற்றனர். அப்போது அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அலங்காரமாதா வலம் வந்தார்.
தொடர்ந்து ஐந்து முனை ரோடு, ஓட்டப் பாலம், கோர்ட் வழியாக மீண்டும் சர்ச்சை அடைந்தது. இதில் பங்கு பேரவையினர், இறை மக்கள், பங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை திருப்பலிக்கு பின் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.