/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பன்னீர்செல்வங்களை களமிறக்கியது தி.மு.க.,வினரும் உதயகுமாரும் தான் பன்னீர்செல்வம் பேச்சு

ADDED : ஏப் 03, 2024 06:53 AM
பரமக்குடி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணி சுயேச்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பரமக்குடி அருகே போகலுார் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள், படித்த இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்து கொடுப்பேன்.
நாட்டில் நிறைய பன்னீர்செல்வங்கள் குழப்பத்தை உருவாக்க வந்து விட்டனர். யாரு செய்தது. தி.மு.க., மற்றும் உதயகுமார். அவர் தான் இந்த சேட்டை எல்லாம் செய்வார். இப்பகுதியில் பல பிரச்னைகள் உள்ளன. அதில் ஒன்று கச்சத்தீவு. அதனை பிரதமர் மோடி நேரடியாக கவனத்தில் கொண்டுள்ளார்.
இந்தப் பகுதியில் இருந்து தான் எங்களது மூதாதையர்கள் தேனி பகுதியில் குடியேறினர். மீண்டும் உங்களை நாடி வந்திருக்கிறேன். நான் ஒருவன் தான் ஓ.பன்னீர்செல்வம். பல இடங்களில் பணிபுரியும் பன்னீர்செல்வங்களை தேடி நிறுத்தி உள்ளனர் என்றார்.
தர்மர் எம்.பி., பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் கதிரவன், செல்வராணி, குமார், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ரஜினிகாந்த், சுரேஷ், நாகநாதன், பாலசுப்பிரமணியன், நடராஜன், அ.ம.மு.க., பா.ம.க., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.