/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழ்ப்புத்தாண்டில் வண்ணாங்குண்டு கிராமத்தில் நெல் விதைத்து உழுது வழிபாடு

ADDED : ஏப் 17, 2024 06:28 AM

பெரியபட்டினம், : பெரியபட்டினம் அருகே வண்ணங்குண்டு கிராமத்தில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நெல் விதைப்பு வழிபாடு நடந்தது.
கிராமத்தில் உள்ள பனையடியான் கோயில் வளாகத்தில் நடப்பாண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் கூட்டு வழிபாடு நடந்தது.
வரும் பருவத்தில் விதைக்க வைத்திருக்கும் கடந்த வருடம் விளைந்த நெல்மணிகளை பனை ஓலை பெட்டியில் எடுத்து வந்து தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் விவசாயிகள் அனைவரும் நெல்மணிகளை பூமியில் விதைத்தனர். அதனைத் தொடர்ந்து டிராக்டர் மூலம் உழவு செய்யப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி பனை ஓலை பட்டையில் பச்சரிசி இனிப்பு கலந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.