/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோடி பிரதமர் ஆனால் இனி தேர்தலே நடக்காது: நடிகர் சந்திரசேகர் பேச்சு
/
மோடி பிரதமர் ஆனால் இனி தேர்தலே நடக்காது: நடிகர் சந்திரசேகர் பேச்சு
மோடி பிரதமர் ஆனால் இனி தேர்தலே நடக்காது: நடிகர் சந்திரசேகர் பேச்சு
மோடி பிரதமர் ஆனால் இனி தேர்தலே நடக்காது: நடிகர் சந்திரசேகர் பேச்சு
ADDED : ஏப் 10, 2024 05:53 AM
தொண்டி : பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது என்று தொண்டியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நடிகர் சந்திரசேகர் பேசினார். அவர் பேசியதாவது:
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தலே நடக்காது. அதனால் தான் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் இண்டியா கூட்டணியை அமைத்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே சாமி என்றால் எப்படி. நாம் கும்பிட குலசாமி வேண்டாமா.
எப்படியாவது தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்றுவிடவேண்டும் என்று மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.
இலங்கை படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்றி அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கடமை டில்லிக்கு உண்டு. ஆனால் அதை செய்ய மோடி தவறி விடுகிறார்.
ஆனால் அந்த காரியங்களை சிறப்பாக செய்து மீனவர்களை ஸ்டாலின் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்றார்.