/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவி கல்லுாரி படிப்பு செலவை ஏற்ற எல்.ஐ.சி.,?
/
மாணவி கல்லுாரி படிப்பு செலவை ஏற்ற எல்.ஐ.சி.,?
UPDATED : மே 17, 2024 06:17 PM
ADDED : மே 17, 2024 07:18 AM
கமுதி : கமுதி அருகே பேரையூர் கூலித் தொழிலாளி தர்மராஜ் மகள் காவிய ஜனனி கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். அரசு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். கட்சியினர், பொதுமக்கள், அமைப்பினர் பாராட்டி நிதியுதவி வழங்கி கவுரவப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் காவிய ஜனனியை பாராட்டும் விதமாக இல்லத்திற்கு நேரடியாக சென்று எல்.ஐ.சி., சார்பில் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுநிலை கோட்ட மேலாளர் நாராயணன் மாணவி காவிய ஜனனிக்கு நினைவு பரிசு வழங்கினார்.
பின்பு கோல்டன் ஜூப்ளி பண்டு மூலமாக மாணவியின் கல்லுாரி படிப்பு வரை கல்வி செலவிற்கான தொகையை முழுமையாக ஏற்பதற்கான ஆவணங்களை பரிந்துரைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
உடன் வணிக மேலாளர் முத்தையன், விற்பனை மேலாளர் லுார்து செல்வகுமார், மேலாளர்கள் அன்புசெழியன், அழகுராஜா உட்பட நிர்வாகிகள், முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

