/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாங்குடி சாத்தையனார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
/
மாங்குடி சாத்தையனார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : மார் 24, 2024 01:00 AM
திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கீழாநிலைக்கோட்டையில் உள்ள மாங்குடி சாத்தையனார், நருவிழி அம்பாள் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று (மார்ச் 24) காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
இக்கோயில் திருப்பணியில் புதிதாக ராஜகோபுரம் மற்றும் மண்டபம், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா மார்ச் 20ல் துவங்கிகணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் முதற்கால யாக பூஜையுடன் தொடர்ந்து யாசாலை பூஜை நடக்கிறது. இன்று 8ம் கால யாக பூஜைக்குப்பின் 9:30 மணிக்கு யாகத்தில் புனிதநீர் குடங்கள் புறப்படாகிகாலை 10:30 மணிக்கு கோபுர கலசத்தில்கும்பாபிஷேகம் நடக்கிறது.
பரிவார தெய்வங்களான கணேசர், நருவிழி அம்பாள், பெரிய கருப்பர், சின்னக்கருப்பர், ஆதிசாஸ்தா, அகஸ்தியர், சன்னாசி, பட்டவர் ஆகிய தெய்வங்களுக்கும் அதே நேரத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை 10:45 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து வேதபாராயணம் நடக்கிறது.
மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
விழா ஏற்பாடுகளை அம்பலக்காரர்கள், கோயில் குடிமக்கள், கிராமத்தார், திருப்பணிக்குழுவினர் செய்கின்றனர்.

