/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பங்குனி உத்திர விழா வழிபாட்டு முறைகளுக்கு கெடுபிடி ஹிந்து முன்னணி கண்டனம்

ADDED : மார் 23, 2024 05:22 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் பங்குனி உத்திர விழாவின் போது காவடி, அலகு குத்தி பக்தர்கள் வருவதற்கு டி.ஆர்.ஓ., விடம் அனுமதி வாங்க கெடுபிடி செய்யப்பட்டு வருவதால் ஹிந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராமமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: மாவட்டத்தில் பங்குனி உத்திரவிழா மார்ச் 25 ல் நடக்கவுள்ளது. இதில் பக்தர்கள் காவடி, அலகு குத்தியும் முருகபெருமானை வழிபாடு செய்வார்கள். இந்த வழிபாட்டுக்கு போலீசார், டி.ஆர்.ஓ., விடம் அனுமதி பெறும்படி தெரிவிக்கின்றனர்.
உயர்நீதிமன்றம் கோயில்களில் வழிபாடு செய்வதற்கு எந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியமில்லை, என உத்திரவிட்ட பிறகும் பக்தர்களை அனுமதி பெற வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் நடவடிக்கைகளில் சிறிதும் சம்பந்தமில்லாத ஆன்மிக வழிபாட்டு நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணைய நடைமுறை விதிகளில் தடை ஏதும் இல்லை.
பங்குனி உத்திர விழாவிற்கு அனுமதி பெற சொல்லும் போலீசாருக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவிக்கின்றது.
விழா எந்த தடையும், இடையூறும் இல்லாமல் நடக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.