/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவமழைக்கு முன் கண்மாய்களுக்கு புதிய கட்டமைப்பு தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : ஏப் 22, 2024 06:45 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் பருவமழையை சமாளிக்க அனைத்து நீர்நிலைகளிலும் புதிய கட்டமைப்புகளும், விவசாயத்தை பாதுகாக்க தொழில்நுட்பங்களையும் செய்ய வேண்டியது அவசியம் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவாடானை தாலுகாவில் 89 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 250 ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய்களும், 500க்கும் மேற்பட்ட ஊருணிகளும் உள்ளன.
இந்த தாலுகாவில் ஆண்டுதோறும் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.
இத்தாலுகாவை பொறுத்தவரை ஆண்டுதோறும் மழை பொழிவு குறைவாகத் தான் இருக்கும்.
இந்த ஆண்டு கால நிலை மாற்றத்தால் பருவமழை அதிகமாக பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியது. இனிவரும் காலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அப்படி மழை பெய்யும் பட்சத்தில் கண்மாய்கள் உடையும் அபாயம் ஏற்படும். ஆகவே இனிவரும் காலங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளில் கட்டமைப்புகளை பராமரிப்பு செய்ய வேண்டும். திருவாடானை விவசாயிகள் கூறியதாவது:
இன்னும் சில மாதங்களில் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. தற்போது கடும் வெயிலால் கண்மாய்களில் நீர் வற்றி வருகிறது.
இதை பயன்படுத்தி பருவமழைக்கு முன் அனைத்து கண்மாய்களையும் துார் வாரவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.