/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
/
பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 14, 2024 04:11 AM

ஏப்.20 தபசு திருக்கோலம்
பரமக்குடி: பரமக்குடியில் சித்திரை திருவிழாவையொட்டி ஈஸ்வரன் கோயிலில் கொடியேற்றம் நடந்தது. ஏப்.20ல் தபசு கோலத்தில் விசாலாட்சி அம்பாள் அருள் பாலிக்கிறார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சந்திரசேகரசுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரைத் திருவிழா துவங்கியது.
நேற்று காலை 11:00 மணிக்கு கோயில் கொடி மரத்தில் நந்திக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 7:00 மணிக்கு பிரியாவிடையுடன் சுவாமி மற்றும் விசாலாட்சி என பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வந்தனர்.
இதே போல் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார். ஏப்.19 இரவு குதிரை வாகனத்தில் திக் விஜயம் நடக்கிறது.
தொடர்ந்து ஏப்.20 காலை விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை 4:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏப்.21 காலை 11:00 மணிக்கு மேல் விசாலாட்சி அம்பாள், சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
தொடர்ந்து இரவு பட்டண பிரவேசமும், மறுநாள் காலை 9:15 மணிக்கு ரத வீதிகளில் சித்திரை தேரோட்டம் நடக்கிறது.
ஏப்.23 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கம், மறுநாள் சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

