ADDED : ஏப் 19, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் மருங்கூர் குரூப் வி.ஏ.ஓ., ராஜேஸ், கிராம உதவியாளர் காந்தி ஆகியோர் மணல் திருட்டு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாம்பாற்றில் டிராக்டரில் மணல் திருடுவது தெரிந்தது.
இதையடுத்து எஸ்.பி.பட்டினம் போலீசார் அரை யூனிட் மணல், டிராக்டரை பறிமுதல் செய்து, புதுவயலை சேர்ந்த நாச்சியப்பன் 55, கைது செய்தனர்.

